நான் ஒரே மாதிரியாக நடிக்கவில்லை - விஜய்

நான் ‌‌ஒரே மாதிரியாக நடிப்பது என்று கூறுவது தவறு, காவலன் படத்தில் கூட வேறு மாதிரியாக நடித்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.

இந்த தீபாவளிக்கு (ரா-1) இந்தியை தவிர்த்து வந்த படங்கள் மூன்று தான் என்றாலும், அதில் விஜய்யின் வேலாயுதம் படமும் ஒன்று.

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில், ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய், ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, சரண்யா மோகன், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி, தீபாவளிக்கு வெளியாகி இருக்கும் இப்படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இப்படம் வெற்றியை பிரஸ்மீட்டில் பகிர்ந்து கொண்டுள்ளார் படத்தின் நாயகன் விஜய்.

அவர் பேசுகையில், நான் நடிச்ச 52 படங்களில் வேலாயுதம் படம் பெரிய ஹிட்டாகியுள்ளதாக கூறுகிறார்கள் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்படியொரு வாய்ப்பை கொடுத்த டைரக்டர் ராஜாவுக்கு வெறும் நன்றி என்று ஒரு வார்த்தையில் சொன்னால் அது போதாது. இந்தபடத்துக்காக ராஜா மட்டுமின்றி அவரது அப்பாவில் இருந்து மொத்த குடும்பமே எனக்காக உழைத்து இருக்கிறார்கள்.

அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி படத்துக்கான தேவைகள், அனைத்தையும் செய்து கொடுத்து தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கும் நன்றி. அப்புறம் இந்தபடத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிக்கைகாரர்களுக்கும் நன்றி.

பொதுவாக கமர்ஷியல் படங்கள் நிறைய வந்தாலும் அது அனைத்தும் வெற்றி பெறுவதில்லை. ஆனா இந்த படத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. படத்தின் ப்ளஸ் பாயிண்டே விஜய் ஆண்டனியின் இசை தான். ரொம்ப அருமையா பண்ணியிருக்கிறார்.

படத்தில் நான் இவ்வளவு நல்ல நடிச்சுருக்கேன்னா, அதுக்கு டைரக்டர் ராஜா தான் காரணம். அவர் என்ன சொன்னாரோ, அதை அப்படியே செய்திருக்கிறேன். படத்தில் அண்ணன், தங்கை சென்டிமெண்ட்டோட காதல், ஆக்ஷ்ன் என அத்தனையும் வச்சிருந்தார் டைரக்டர். ஜெனிலியா, ஹன்சிகா ஆகிய இரண்டு ஹீரோயின்கள் கூட நடித்தது நல்ல அனுபவம்.

நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. காவலன் படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன். அடுத்து நான் நடிச்ச நண்பன் படம் பொங்கலுக்கு ரிலீசாக இருக்கிறது.

டைரக்டர் ஷங்கர் இப்படத்தை இந்தி பட ரேஞ்சுக்கு இயக்கி இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும். அடுத்த வருடம் கவுதம் இயக்கத்தில் யோகஹன் அத்தியாயம் ஒன்று படத்தில் நடிக்கிறேன் என்றார்.

இயக்குநர் ராஜா பேசுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம் வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி என்றார்.

1 comments:

ஜோசப் இஸ்ரேல் said...

நான் நடிக்கவே இல்லை என்பது தான் சரி என நினைக்கிறேன். நீங்கள் விஜய் ரசிகர் என்றால் என்னை மன்னிக்கவும்

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...