நான் ஈ படத்தில் வில்லனாக நடித்தது ஏன்?

கன்னட உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர் சுதீப். 1996இல் இவர் நடித்த முதல் படம் வெறும் மூன்று நாட்களே ஓடியது, அதை அடுத்து தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார்.

ஆனாலும் அவருக்கு வெள்ளித்திரை மீதான ஆசை அவரை விடவில்லை. அதனைத்தொடர்ந்து சில படங்களில் நடிக்க தொடங்கினார். தமிழில் பாலா இயக்கத்தில், விக்ரம் நடித்த சேது படம் கன்னடத்தில் ரீ-மேக்கானது.

இந்தப்படத்தை எடுக்க பலரும் முன்வந்தபோதும் கன்னட பிரபலங்கள் அதில் நடிக்க தயங்கினர். ஏனென்றால் மொட்டை அடிக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் சுதீப் எதுக்கும் தயாராக இருந்தார், மொட்டை அடித்து நடித்தார். கன்னடத்திலும் சேது வெற்றி படமாக அமைந்தது.

கன்னடத்தில் அவர் நடித்த கிச்சா படம் சுதீப் கிச்சா சுதீப்பாக மாறினார். இந்நிலையில் தமிழில் சமீபத்தில் வெளிவந்த நான் ஈ படம் அவருக்கு பெரும் பெயரை பெற்று தந்துள்ளது.

சமீபத்தில் நான் ஈ படத்தின் வெற்றியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட சுதீப்பை நாம் சந்தித்தபோது அவர் பேசியதாவது, பல முறை சென்னை வந்திருக்கேன். ஆனா இந்த முறை வந்த போது மிரண்டு போய்விட்டேன், பெரிய பேனர்கள், போஸ்டர்கள், எங்கு பார்த்தாலும் விளம்பரங்கள்.

இதன்மூலம் மக்கள் கிட்ட நான் எந்தளவுக்கு ரீச் ஆகி இருக்கேன் என்று எனக்கு தெரியுது. நிறைய பேர் என்கிட்ட கேட்டாங்க ,கன்னடத்தில் பெரிய ஸ்டார் நீங்க, ஏன் இப்படி வில்லனா நடிக்க ஒத்துகிட்டீங்க. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன், ராஜ மௌலி என்னிடம் கதை சொல்லும்போது மூணு வரியல சொன்னார்.

ரெண்டு பேர் லவ் பண்றாங்க. அதில், ஹீரோவ நீங்க கொன்றுவிடுவிங்க, ஹீரோ ஈயா பிறந்து உங்களை பழி வாங்குவார் இதான் கதை என்றார். கொஞ்சம் அமைதியா இருந்தேன். பின் அவரிடம் என்னை ஏன் செலக்ட் பண்ணிங்க என கேட்டேன்.

அதற்கு அவர் படம் வந்த பிறகு தெரியும் என்றார். இப்போது அதை நான் அனுபவிக்கிறேன். சொல்லப்போனால் நான் கதைக்காக நடிக்கல, ராஜ மௌலிக்காக நடித்தேன். அவர் கூட வேலை பார்த்தது ரொம்ப நல்ல அனுபவம்,

* ஒரு ஈயை கற்பனையில் நினைத்து நடிக்கிறது ரொம்ப கஷ்டமான்னு கேட்டா ரொம்ப ஈசி. ஒரு இடத்தை மையமா வச்சு அங்க ஈ என நினைத்து நடிப்பது ரொம்ப சுலபம். மற்றபடி எல்லாத்தையும் கம்ப்யூட்டர் மக்கள் பார்துபாங்க. அந்த இடத்தில லைட் தான் ரொம்ப பவர், கண் கொஞ்சநேரம் ஓண்ணும் தெரியாது, ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன். ஆனா இந்த வெற்றியில அந்த வலி எல்லாம் மறந்து போச்சு.

* கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் இந்த படத்துக்காக ராஜ மௌலி ஒரு டீச்சர் போல எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தார். ஷூட்டிங் முடித்து அடுத்த நாள் எடுக்க வேண்டிய சீன்கள் பற்றி விளக்குவார். முதலில் தெலுங்கு, அப்புறம் தமிழ். ரெண்டு மொழியிலும் மாத்தி மாத்தி சொல்லுவார். தமிழை காட்டிலும் எனக்கு தெலுங்கு ரொம்ப கஷ்டம். டீச்சர் வைத்து கத்துகிட்டேன். சத்யமா சொல்றேன் இந்தபடம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம்.

* இந்த படத்தில் நடித்த நானி பற்றி சொல்லணும். ரொம்ப நல்ல பையன், நல்ல நடிகரா வருவான், ஷூட்டிங் முடிந்த அடுத்த நிமிஷமே அண்ணா அண்ணா என்று அப்படி ஓடி வருவான். படத்தில் நான் சமந்தாவை ரொம்ப டார்ச்சர் செய்திருப்பேன். எல்லாம் நடிப்புதான், நிஜத்தில நான் அப்டி இல்ல, ரொம்ப நல்லவன். நம்புங்க என்றார்.

* எனக்கு என்ன ரொம்ப சந்தோஷம் என்றால், என்னை தமிழ் மக்கள் ஏற்று கொண்டு உள்ளார்கள், அன்பையும், பாராட்டையும் அள்ளி கொடுக்குறாங்க. ஒருநாள், ஒரு தயாரிப்பாளர் அவர் போன்ல எனக்கு ஒரு கால் வந்துச்சு பேசுன்னு சொல்லி கொடுத்தார்.

யார்னு கேட்டா ரஜினின்னு சொன்னார். அவர்கிட்ட கேட்டேன். நீங்க நிஜமாவே ரஜினியா, இல்லை எதுவும் ஜோக் பன்றிங்கலான்னு கேட்டேன். நான் ரஜினி தான் பேசுறேன். நான் ஈ படத்தில் நல்லா நடிசிருந்திங்கன்னு சொன்னார். அப்படியே ஆஸ்கார் அவார்ட் கிடைச்ச மாதிரி இருந்துச்சு. இப்ப இந்தியன் சினிமா நல்லா இருக்கு. நல்ல நல்ல படங்களா வருது.

இந்த படத்துக்கு பிறகு எந்த படத்திலும் நான் நடிக்கல. கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கேன். நான் ஈ படத்தில எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த ராஜ மெளலிக்கும், பி.வி.பி., சினிமாவுக்கும் என் நன்றி என்று சொல்லி முடித்தார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...