நடிகை ஸ்ரீதேவியுடன், அஜீத் நடிக்கும் காட்சிகள்

பழைய நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு பிறகு ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ என்ற படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் தயாராகிறது.

இதில் முக்கிய காட்சி ஒன்றில் முன்னணி நடிகர்கள், கவுரவ தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் தோன்றுகின்றனர். இந்தி படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.

தமிழ் பதிப்பில் ஸ்ரீதேவியுடன் நடிக்க அஜீத்திடம் கேட்டனர். அவர் சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதேவி, அஜீத் நடிக்கும் காட்சிகளை வருகிற 13-ந்தேதி மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்குகின்றனர்.

இதற்காக அங்கு செட் போடப்பட்டு உள்ளது. 13-ந்தேதி ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் ஆகும். படப்பிடிப்பிலேயே அவரது பிறந்தநாளை கொண்டாடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படம் அக்டோபர் 5-ந்தேதி ரிலீசாகிறது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...